தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடைக்கானலில் தொடர் மழை, நட்சத்திர ஏரி பகுதி மக்களுக்கு எச்சரிக்கை - kodaikanal rain

திண்டுக்கல்: கொடைக்கானலில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் நட்சத்திர ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் மாலையில் ஏரி திறக்கப்படும் எனவும் கரையோரம் இருக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கொடைக்கானல் நகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

நட்சத்திர ஏரி பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
நட்சத்திர ஏரி பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

By

Published : Nov 17, 2020, 9:20 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்துவந்தது. கடந்த இரண்டு நாள்களாக மிதமான மழையும் பெய்துவருகிறது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. கொடைக்கானலில் இன்று (நவ. 17) காலை லேசான மழை பெய்யத்தொடங்கியது. பிறகு ஏரிசாலை, அப்சர்வேட்டரி, பாம்பார்புரம், நாயுடுபுரம், சீனிவாசபுரம், அண்ணாசாலை, பேருந்து நிலைய பகுதி, தெரசாநகர், பள்ளங்கி, அட்டுவம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.

கொடைக்கானலில் தொடர் மழை

தொடர்ந்து மழை அதிகரித்துவருவதால் கொடைக்கானல் நட்சத்திர ஏரி நிரம்பியுள்ளது. இதனால் இரவு ஏரி தண்ணீர் திறந்துவிடப்படும் எனவும் ஏரிக்கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க... கொடைக்கானல் சுற்றுலா தலங்கள் இன்று முதல் திறக்கப்படும்!

ABOUT THE AUTHOR

...view details