திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அவுட்டர், செந்துறைப் பிரிவு பாலத்திலிருந்து ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்ததாக நத்தம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அவரது சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல்கட்ட விசாரணையில் அந்நபர் செங்குறிச்சி, புதுப்பட்டியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான தாண்டுமுனி (வயது 46) என்பது தெரியவந்துள்ளது.