திண்டுக்கல்:தொடர்ந்து பெய்து வந்த மழைகளுக்குப் பிறகு, கொடைக்கானலில் இருந்து வத்தலக்குண்டு செல்லும் வழியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் இன்று (செப்.18) தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில் ஏற்படும் மண் அரிப்பைத் தடுக்கும் விதமாக, பத்துக்கும் மேலான இடங்களில் மழைநீர் ஏற்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, கொடைக்கானலில் இருந்து 18 கி.மீ.க்கு அப்பால் உள்ள மச்சூர் பகுதியில் இருந்து கொடைக்கானல் நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட சாலை வரை தார் சாலை அமைக்கும் பணிகள் ஓரிரு வாரங்களில் முடிவடையும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு தார் சாலை அமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்படும் தார் கலவைகள் வத்தலக்குண்டு பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டன.