தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து பைக்கிற்கு பாடைக்கட்டி நூதன ஆர்ப்பாட்டம் - Rising petrol and diesel prices

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இருசக்கர வாகனத்திற்கு பாடைக்கட்டி நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இருசக்கர வாகனத்திற்கு பாடைகட்டி நூதன ஆர்ப்பாட்டம்
இருசக்கர வாகனத்திற்கு பாடைகட்டி நூதன ஆர்ப்பாட்டம்

By

Published : Jun 10, 2021, 4:23 PM IST

திண்டுக்கல் பேகம்பூர் சிக்னல் அருகே எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாவட்ட தலைவர் முகமது லத்தீப் தலைமையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் இரு சக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து பாடைக்கட்டி போராட்டம் நடத்தினர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெறக்கோரி கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.

கரோனா பேரிடர் காலத்தில் மக்கள் வாழ்வாதாரத்திற்கு தவிக்கும் நேரத்தில் மத்திய அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை உயர்த்திவருகிறது. இந்த ஈவு இரக்கமற்ற செயலைக் கண்டிக்கத்தக்கது. அரசு உடனே விலைவாசி உயர்வைத் திரும்பப்பெற வேண்டும் எனத் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details