திண்டுக்கல் வேடசந்தூர் தாலுகா வடமதுரை அருகே அம்மாபட்டியைச்சேர்ந்தவர், கிருஷ்ணமூர்த்தி (25). இவருடைய மனைவி அழகேஸ்வரி (23). கிருஷ்ணமூர்த்தி கம்பிளியம்பட்டி பகுதியில் செல்போன் கடை வைத்து சர்வீஸ் செய்து வருகிறார். இந்நிலையில் தனது சொந்த தேவைக்காகவும் வாடகைக்கு விடுவதற்காகவும் கார் ஒன்றை வாங்கலாம் என்று ஓஎல்எக்ஸ் (OLX) மூலம் வாகனத்தை தேடிக்கொண்டிருந்தார்.
அப்போது, சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த சுதர்சன் என்பவர் வாகனம் விற்பனைக்கு என்று புகைப்படம் மற்றும் அவரது அலைபேசியை அனுப்பியுள்ளார்.அவரைத் தொடர்புகொண்டு கிருஷ்ணமூர்த்தி பேசியுள்ளார். தான் ராணுவத்தில் பணிபுரிவதாகவும் தனது அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை அனுப்பியுள்ளார்.
அதனை நம்பிய கிருஷ்ணமூர்த்தியிடம், ராணுவ வீரர் முதலில் பணத்தை அனுப்பினால் உங்களுடைய முகவரிக்கு கார் வந்துவிடும் என்று கூறி, சிறுக சிறுக 42 ஆயிரம் ரூபாயைப்பெற்றுள்ளார். பின்னர் அந்த ராணுவ வீரர் எனக்கூறிக்கொண்ட சுதர்சன் இறுதியாக 5ஆயிரம் ரூபாய் அனுப்பினால் ’உங்களுக்கு கார் வந்து சென்று விடும்’ என்று கூறியுள்ளார்.