தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழனியில் பரபரப்பை ஏற்படுத்திய நினைவஞ்சலி போஸ்டர் - police

பழனியில் மூன்றாண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட நபரின் நினைவஞ்சலியை முன்னிட்டு கொலையாளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் உறவினர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நினைவு அஞ்சலி போஸ்டர்
நினைவு அஞ்சலி போஸ்டர்

By

Published : May 15, 2022, 10:57 PM IST

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே அமரபூண்டியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மண்டையன் என்ற சங்கர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட சங்கரை கொலை செய்தவர்கள் அண்மையில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்தனர்.

இந்நிலையில் சங்கரின் 3ஆவது ஆண்டு நினைவு தினமான இன்று (மே 15) பழனி நகர் முழுவதும் நினைவஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. அதில் சங்கர் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டதாகவும், ’உன்னைக் கொலை செய்தவர்கள் யாரும் வாழ மாட்டார்’ என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தது. கொலையாளிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது‌.

இதுகுறித்து போலீசார் போஸ்டர் ஒட்டிய பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழிக்கு பழியாக மற்றொரு கொலை சம்பவம் நடப்பதற்கு முன்பு போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:'ஹேம்நாத் தான் கொலை செய்தது...' சித்ராவின் பெற்றோர் ஆவேசம்!

ABOUT THE AUTHOR

...view details