தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயம்புத்தூர் பள்ளி மாணவி மரணத்திற்கு நீதி கிடைத்திட திண்டுக்கல் எஸ்.பியிடம் மனு - கோயம்புத்தூர் பள்ளி மாணவி மரணம்

திண்டுக்கல்:கோயம்புத்தூரில் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவிக்கு உரிய நீதி கிடைக்க வேண்டி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பேரணியாக வந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.

c
c

By

Published : Nov 17, 2021, 11:06 PM IST

கோயம்புத்தூரில் ஆசிரியரின் பாலியல் தொல்லையால் 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாட்டில் பல பகுதியில் மாணவியைத் தற்கொலைக்கு தூண்டியவர்களுக்கு அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும் எனக் கூறி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

ஊர்வலம்

அந்த வகையில், மாணவியின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டி திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள அனைத்து கல்லூரி மாணவர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கையில் கண்டனப் பதாகைகளுடன் முழக்கங்கள் எழுப்பியவாறு திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

ஊர்வலமாகச் சென்ற மாணவர்களை திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனை முன்பு தடுத்து நிறுத்தி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் மாணவர்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக தருமாறு கூறினார்.

இதையடுத்து பள்ளி மாணவியைத் தற்கொலைக்குத் தூண்டியவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும்; கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடத்திட வேண்டும் எனவும் மாணவர்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் வழங்கினர்.

இதையும் படிங்க: கோவை மாணவி தற்கொலை வழக்கு: பள்ளி முதல்வர் மீது பாய்ந்தது போக்சோ

ABOUT THE AUTHOR

...view details