திண்டுக்கல்:பழனி தண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூசத் திருவிழாவை(Palani Temple Thaipusam) முன்னிட்டு பயணிகள் வசதிக்காக கோயம்புத்தூர் - திண்டுக்கல் இடையே ஒரு முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, கோயம்புத்தூர் - திண்டுக்கல் முன்பதிவில்லா சிறப்பு ரயில்(Special Train) (06077) ஜனவரி 28, 29, பிப்ரவரி 4, 5, 6ஆகிய நாட்களில் கோயம்புத்தூரில் இருந்து காலை 09.20 மணிக்கு புறப்பட்டு மதியம் 01.00 மணிக்கு திண்டுக்கல் வந்து சேரும். மறு மார்க்கத்தில் திண்டுக்கல் - கோயம்புத்தூர் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06078) இதே நாட்களில் திண்டுக்கல்லில் இருந்து மதியம் 02.00 மணிக்குப் புறப்பட்டு மாலை 05.30 மணிக்கு கோயம்புத்தூர் சென்று சேரும்.