தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'புதிய மாவட்டமாகும் பழனி' - முதலமைச்சர் பழனிசாமி உறுதி

திண்டுக்கல்: பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று பழனியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

'புதிய மாவட்டமாகும் பழனி' - முதலமைச்சர் பழனிசாமி உறுதி
'புதிய மாவட்டமாகும் பழனி' - முதலமைச்சர் பழனிசாமி உறுதி

By

Published : Mar 24, 2021, 11:11 PM IST

Updated : Mar 25, 2021, 12:15 AM IST

திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரவி மனோகரனை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.

முதலமைச்சர் பழனிசாமி பரப்புரை

அப்போது பேசிய அவர் , “திமுக கூட்டணி சந்தர்ப்பவாதக் கூட்டணி. அதிமுக கூட்டணியே வலிமையான வெற்றிக் கூட்டணி. இந்தத் தேர்தலோடு திமுகவின் சகாப்தம் முடிவுக்கு வரும். தைப்பூச திருநாளைச் சிறப்பாகக் கொண்டாட அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது.

மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுகின்ற அரசு அதிமுக அரசு. நிலமும், வீடும் இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு அரசே நிலம் வாங்கி கான்க்ரீட் வீடுகள் கட்டித்தரும். இல்லத்தரசிகளின் பணிச்சுமையைக் குறைக்க இல்லந்தோறும் வாஷிங்மெஷின் வழங்கப்படும்.

'புதிய மாவட்டமாகும் பழனி' - முதலமைச்சர் பழனிசாமி உறுதி

பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று பழனியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும். கடவுளே இல்லை எனக்கூறி வந்த திமுகவினர் தற்போது கையில் வேல் பிடித்துள்ளனர்” என்றார்.

Last Updated : Mar 25, 2021, 12:15 AM IST

ABOUT THE AUTHOR

...view details