திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட மேட்டுப்பட்டியில் பிரசித்திபெற்ற புனித வியாகுல அன்னை மாதா ஆலயம் அமைந்துள்ளது. 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த ஆலயத்தில் நடைபெறும் பாஸ்கு திருவிழா திண்டுக்கல் மட்டுமின்றி அனைத்துப் பகுதிகளிலிருந்து வருவது வழக்கம். மேலும், இந்த ஆலயத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.
அன்னை மாதா சிலையின் கண்களிலிருந்து தண்ணீர்...! - மேட்டுப்பட்டி
திண்டுக்கல்: மேட்டுப்பட்டியில் பிரசித்திபெற்ற புனித வியாகுல அன்னை மாதா சிலையின் கண்களில் இருந்து தண்ணீர் போன்ற திரவம் சுரப்பதாகவும் அதனைக் காண மக்கள் குவிந்ததாகவும் கூறப்படுகிறது.
![அன்னை மாதா சிலையின் கண்களிலிருந்து தண்ணீர்...!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3654826-thumbnail-3x2-madha.jpg)
mary-tears
அன்னை மாதா சிலை
இந்நிலையில் நேற்றிரவு (ஜூன் 24) எட்டு மணியளவில் மாதா சிலையின் கண்களில் இருந்து தண்ணீர் போன்ற திரவம் வழியத் தொடங்கியதாக கூறப்படுகிறது. இதனைக் காண மக்கள் குவிந்ததாகவும் தெரிகிறது.
'இதுபோன்ற, பல்வேறு வதந்திகள் பல காலகட்டங்களில் பரவுவதும் அதனைக் காண மக்கள் கூடுவதும் அவ்வப்போது அரங்கேறத்தான் செய்கின்றன. இந்த மாதிரியான மூட நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் ஒழிய வேண்டும்' என முற்போக்குச் சிந்தனைவாதிகள் கூறுகின்றனர்.
Last Updated : Jun 25, 2019, 9:43 AM IST