சுற்றுலா நகரான கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் விழா களையிழந்து காணப்படுகிறது. இந்நகரில் உள்ள விடுதிகள் மற்றும் தேவாலயங்களில் கிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக வண்ண, வண்ண ஸ்டார்கள் மிளிர்கின்றன.
கரோனா பொதுமுடக்கத்திற்கு பின்னர் பல்வேறு தளர்வுகளுடன் கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி அளித்தாலும் இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. வழக்கமாக டிசம்பர் இறுதி வாரத்தில் இருந்து ஜனவரி முதல் வாரம் வரை கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை கொண்டாடுவதற்காக வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருவார்கள்.