திண்டுக்கல்:உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
அப்போது, கிறிஸ்தவர்கள், ஏசு கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடும் வகையில் வீடுகள், தேவாலயங்களில் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்வர்.
தற்போது விழாவைக் கொண்டாட கிறிஸ்தவ மக்கள் தயாராகி வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான கேக் வகைகள் தயாரிக்கும் பணிகளில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 500-க்கும் மேற்பட்ட பேக்கரிக் கடைகள் தயாராகி வருகின்றன.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான கேக் வகைகள் பல வண்ணங்களில் தயாராகி வருகின்றன.
பிளம்கேக், வெண்ணிலா, வால்நட், ரிச் பிளம், பனானா கேக், நெய் கேக், பட்டர் புட்டி, சாக்லெட் கேக், கிறிஸ்துமஸ் குக்கீஸ் போன்ற வகைகள் அதிகமாகத் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.