தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழனியில் பழுதாகி நிற்கும் சென்னை - பாலக்காடு எக்ஸ்பிரஸ் - திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சென்னையில் இருந்து நேற்றிரவு (மார்ச் 19) புறப்பட்டு பாலக்காடு நோக்கி சென்ற விரைவு ரயில், பழனி அருகே பழுதாகி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நிற்பதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

chennai palakkad Express breakdown in Palani
chennai palakkad Express breakdown in Palani

By

Published : Mar 20, 2022, 2:34 PM IST

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில் நிலையத்திற்கு தினமும் சென்னை, திருவனந்தபுரம், மதுரை, கோவை ஆகிய ஊர்களில் இருந்து ரயில்கள் வந்துசெல்கின்றன. இவற்றில் தினமும் சென்னையில் இருந்து வரும் ரயிலில், அதிகளவிலான பயணிகள் பயணம் செய்யும் நிலை உள்ளது.

இந்நிலையில், நேற்றிரவு 9.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சென்னை - பாலக்காடு விரைவு ரயில் இன்று (மார்ச் 20) காலை 7.10 மணிக்கு பழனி ரயில்நிலையம் வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று காலை 6மணியளவில் பழனி அருகே கோம்பைப்பட்டி பகுதியில் அந்த ரயில் பழுதாகி நின்றது.

பின்னர், 9.30 மணியளவில் திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை நோக்கி வந்த அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலை பழனியில் நிறுத்திவைத்து, அதன் இன்ஜினை சென்னை ரயிலில் இணைத்து ரயிலை பழனிக்கு இழுத்து வந்தனர்.

அதன்பிறகு, அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் மீண்டும் மதுரைக்கு சென்றது. ரயில் இன்ஜின் பழுது காரணமாக சுமார் 3 மணி நேரம் தாமதத்தால் ரயில் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

இதையும் படிங்க: ஏப்ரல் 1 முதல் மதுரை கோட்டத்தில் இரு சிறப்பு ரயில்கள்

ABOUT THE AUTHOR

...view details