திண்டுக்கல் மாவட்டம் பழனி 'சேம்பர் ஆஃப் காமர்ஸ்' என்ற வணிகர் சங்கத்தின் சார்பாக 33 லட்சம் ரூபாய் மதிப்பில் பழனி அரசு மருத்துவமனையில் புதிய ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்ஸிஜன் மையத்தை தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், "கரோனா காலங்களில் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளது. இதைப் போக்கும் வகையில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் அமைத்துத் தந்த 'சேம்பர் ஆஃப் காமர்ஸ்' வணிகர் சங்கத்திற்குப் பாராட்டை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் மூலம் ஒருமணி நேரத்திற்கு 100லிட்டர் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யமுடியும். இதன்மூலம் நாள் ஒன்றுக்கு 20 நோயாளிகள்வரை பயனடைவர்" என்றார்.