தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 14, 2021, 6:36 AM IST

ETV Bharat / state

ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும் - தேசிய தொழிலாளர் ஆணைய தலைவர்

தூய்மை பணியாளர்களின் ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும் என தேசிய தொழிலாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

reviewmetting
வெங்கடேசன்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேசிய தொழிலாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் தலைமையில் தூய்மைப் பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் உடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன், மாவட்ட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது, "பெரும்பாலான தூய்மைப் பணியாளர்கள் தங்களுக்கு ஒப்பந்த முறையில் சம்பளம் வழங்கப்படுகிறது அதை மாற்றி நிரந்தர சம்பளமாக வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். மேலும், மாநகராட்சியில் நிரந்தர பணியாளர்களாக வேலை பார்த்த தூய்மைப் பணியாளர்கள் பணியின் போது உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு தற்போது வரை பணிகள் வழங்கப்படவில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்".

இதற்கு மாநகராட்சி ஆணையாளர் இரண்டு மாதத்திற்குள் உயிரிழந்தவர்களில் வாரிசுகள் கண்டிப்பாக பணி அமர்த்தப்படுவார்கள் எனத் தெரிவித்தார்".

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தேசிய தூய்மை ஆணையாளர், "தூய்மை பணியாளர்களுக்காக ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்டு குழு அமைத்து அவர்களுக்கு என்னென்ன குறைகள் உள்ளது என்பதை விசாரிக்கத் தமிழ்நாடு முதலமைச்சரிடம் பரிந்துரை செய்வேன்.

தேசிய தொழிலாளர் ஆணையம் தலைவர் வெங்கடேசன்

தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் 8 மணி நேரம் வேலைக்கேற்ற ஊதியமும், வாரத்துக்கு ஒரு நாள் முழு விடுமுறை வழங்கவும் வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க :'அரசின் மௌனம்... மாணவர்களின் மருத்துவக் கனவு கேள்விக்குறி' - எடப்பாடி பழனிசாமி

ABOUT THE AUTHOR

...view details