தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடைரோடு அருகே தாறுமாறாக ஓடிய கார் மோதி விபத்து; 8 பேர் படுகாயம் - கொடைரோடு அருகே தாறுமாறாக ஓடிய கார் மோதி விபத்து

கொடைரோடு அருகே கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய காரால் அடுத்தடுத்து ஏற்பட்ட விபத்தினால், 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கார்
கார்

By

Published : Jun 14, 2022, 4:12 PM IST

திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி கார் ஒன்று நேற்று (ஜூன் 13) சென்று கொண்டிருந்தது. அப்போது, கொடைரோடு அருகே பள்ளபட்டி மாவூர் அணைப்பிரிவில் உள்ள நான்கு வழிச்சாலையில், அந்த கார் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

இதன் தொடர்ச்சியாக கட்டுபாட்டை இழந்த கார், சாலையின் நடுவே இருந்த தடுப்புகளைத் தாண்டி எதிரே மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த ஒரு பைக் உட்பட 2 கார்களின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அதில் பயணித்த 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

நெடுஞ்சாலையில் தாறுமாறாக ஓடிய காரினால் விபத்து

இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதியினர் காயமடைந்தவர்களை மீட்டு அவர்கள் சிகிச்சைக்காக அனுப்பினர். பின் தகவலறிந்து வந்த விபத்து குறித்து அம்மையநாயக்கனூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் சற்று நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: அடுத்த 1.5 ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலை

ABOUT THE AUTHOR

...view details