திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மோகன். இவர் வேலூரில் தனியார் செய்தித்தாள் நிறுவனத்தில் புகைப்படக்காரராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று(ஜூன்.19) அதிகாலை தனது சொந்த ஊரான திருநெல்வேலிக்கு காரில் தனது மனைவி சோனியா மற்றும் குழந்தைகள் அனுசியா(12),ஹேமா பிரபா(8) ஆகிய இரண்டு குழந்தைகளுடன் சென்று கொண்டிருந்தனர்.
காரை ஓட்டுநர் பிரபு ஓட்டி சென்றுள்ளார். கார் மதுரை - திண்டுக்கல் நான்குவழிச் சாலையில் உள்ள போக்குவரத்து நகர் அருகே சென்ற பொழுது காரின் இடது முன்பக்க டயர் வெடித்து சாலையின் ஓரத்திலிருந்த பள்ளத்தில் உருண்டு விழுந்தது. காரில் பயணம் செய்த மோகன் அவரது மனைவி மற்றும் ஒரு குழந்தைக்கு லேசான காயம் ஏற்பட்டது.