திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 432 கோடி ரூபாய் செலவில் காவேரி கூட்டுக் குடிநீர் குழாய், தண்ணீர் ஏற்றும் நிலையம் அமைக்கப்பட்டது. இங்கிருந்து தினமும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் திண்டுக்கல், நத்தம், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுவருகிறது.
இந்நிலையில் நத்தம் பகுதி குடிநீர் வசதிக்காக எரியோடு-குஜிலிம்பாறை சாலையில் அமைக்கப்பட்டுள்ள ராட்சத குழாயை கோவிலூர் ஊராட்சி தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்கள் உடைத்ததால் நீர் வீணாகிவருகிறது. குடிநீர் குழாயை அலட்சியப் போக்குடன் உடைத்தவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதிமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.