தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகர் பாபி சிம்ஹா, கேஜிஎப் பட வில்லன் மீது வழக்குப்பதிவு.. காரணம் என்ன தெரியுமா?

Bobby Simha kodaikanal land issue: நடிகர் பாபி சிம்ஹா மற்றும் கேஜிஎப் படத்தில் வில்லனாக நடித்த ராமசந்திரா ராஜூ உள்ளிட்ட 4 பேர் மீது கொடைக்கனல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Bobby Simha kodaikanal land issue
நடிகர் பாபி சிம்ஹா மற்றும் கேஜிஎப் பட வில்லன் மீது வழக்குப் பதிவு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2023, 5:25 PM IST

திண்டுக்கல்: கொடைக்கானல், வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேத்துப்பாறை கிராமத்தில், பிரபல நடிகர் பாபி சிம்ஹாவுக்கு சொந்தமாக நிலம் உள்ளது. அதில் பாபி சிம்ஹா ஒப்பந்த அடிப்படையில் கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியைச் சேர்ந்த ஜமீர் என்பவர் மூலம் கட்டடம் க‌ட்டும் பணிகளை மேற்கொண்டு வந்ததாகவும், தற்போது அந்த கட்டட பணிகள் கிட்டத்தட்ட 90% முடிந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பாபி சிம்ஹாவிற்கும் ஒப்பந்தகாரர் ஜமீருக்கும் இடையே க‌ட்டட‌ க‌ட்டுமான‌ ச‌ம்ம‌ந்த‌மாக‌ முரண்பாடுகள் ஏற்பட்டு கட்டட பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. பின்னர் ஒப்பந்ததாரர் மீது நடிகர் பாபி சிம்ஹா புகார் அளித்ததைத் தொடரந்து, அவர்மீது மீது கொலை மிரட்டல், ஏமாற்றுதல், அருவருக்கத்தக்க வார்த்தைகளைப் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வந்தனர்.

பின்னர் பாபி சிம்ஹா ஒப்பந்தகாரருக்கு பல லட்சம் பணம் தர வேண்டும் எனவும் சொல்லப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஜமீர் அவரது தந்தை இருவரும் பாபி சிம்ஹாவிடம் பணம் கேட்கும் போது, பாபி சிம்ஹா முதியவர் என்றும் பாராமல் ஜ‌மீரின் த‌ந்தையை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் ஒப்பந்தகாரர் ஜமீரின் உறவினரான உஷேன், பாபி சிம்ஹா இருவரும் பள்ளி நண்பர்களாக‌ இருந்து வந்துள்ளனர். இதன் காரணமாக அந்த கட்டட பணி ஒப்பந்தம் ஜ‌மீருக்கு கிடைத்ததால், இது குறித்து ஜமீர் உஷேனிடம் தெரிவித்தாக சொல்லப்படுகிறது. இதன் அடிப்படையில் உஷேன், பாபி சிம்ஹாவிட‌ம் அறிவுரை கூற முற்பட்ட போது, இந்த விஷயத்தில் தலையிட வேண்டாம் என கூறியதாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து உஷேனுக்கு சொந்த‌மான தங்கும் விடுதி ஒன்று செண்பகனூர் பகுதியில் உள்ளது. இந்த விடுதிக்கு கடந்த மாதம் 20 ஆம் தேதி பாபி சிம்ஹா, கேஜிஎப் படத்தின் வில்லன் நடிகரான ராமசந்திரா ராஜூ மற்றும் அடையாளம் தெரியாத இருவர் உள்ளிட்ட 4 நபர்கள் சென்றதாகவும், இந்த விஷயத்தில் தலையிட்டால் உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டல் விடுத்ததாகவும் விடுதியில் இருந்த ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

பின்னர் விடுதியின் மேலாளர் காவல் நிலையம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் டிஐஜியிடமும் புகார் அளித்துள்ளார். பின் கடந்த 10 ஆம் தேதி தபாலில் வரப்பெற்ற புகார் அடிப்படையில், பாபி சிம்ஹா மற்றும் ராமசந்திரா ராஜூ அடையாளம் தெரியாத இருவர் உள்ளிட்ட 4 நபர்கள் மீது கொடைக்கானல் காவல் நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒப்பந்தகாரரின் 10 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பாபி சிம்ஹா திருடி க‌ட்டட‌த்திற்குள் வைத்துள்ளதாகவும் அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதி பாபி சிம்ஹா கொடைக்கானல் காவல்நிலையத்தில் ஒப்பந்தகாரர் ஜமீர் மற்றும் அவரது தந்தை, ஒப்பந்தகாரரின் உறவினர் உஷேன், பேத்துப்பாறை மகேந்திரன் உள்ளிட்ட 4 நபர்கள் மீது புகார் அளிக்கப்பட்டு 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் 3 வது நபர் உஷேன் தற்போது பாபி சிம்ஹா மற்றும் கேஜிஎப் வில்லன் ராமசந்திரா ராஜூ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இரு தரப்புகளில் இருந்தும் மாறி மாறி கொடுக்கப்படும் புகார்களால், 2 தரப்புகளிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வரும் நிகழ்வு காவல் நிலையத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதையும் படிங்க: நிபா வைரஸ் பரவல்: கேரள பயணிகளிடம் தீவிர சோதனை! கொட்டும் மழையிலும் சுகாதாரத் துறையினர் கண்காணிப்பு பணி தீவிரம்!

ABOUT THE AUTHOR

...view details