தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மதுபோதையில் கும்பலாக குத்தாட்டம்' வழக்குப் பதிய காரணமான வைரல் காணொலி - கரோனா விதிமுறை மீறல்

திண்டுக்கல்: கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறி மதுபோதையில் கும்பலாக குத்தாட்டம் போட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

மதுபோதையில் கும்பலாக குத்தாட்டம்
மதுபோதையில் கும்பலாக குத்தாட்டம்

By

Published : Jul 24, 2020, 7:11 PM IST

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அஞ்சுகம் காலனியில் ஜூலை 18ஆம் தேதி இரவு லையன்ஸ் கிளப் உறுப்பினர்கள் 50க்கும் மேற்பட்டோர் விருந்து ஒன்றில் கலந்துகொண்டனர். அதில் அவர்கள் மது அருந்திவிட்டு தகுந்த இடைவெளியை மறந்து கும்பலாக சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்டதாக தெரிகிறது.

அதுகுறித்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது. அதைத்தொடர்ந்து அக்காணொலி செம்பட்டி காவல் நிலைய துணை ஆய்வாளர் நாராயணனுக்கு பகிரப்பட்டுள்ளது.

மதுபோதையில் கும்பலாக குத்தாட்டம்

அதனடிப்படையில் அவர் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறி செயல்படுவதாக காணொலி குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் திண்டுக்கல்லில் மொத்தம் 1,930 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவல் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. அப்படிப்பட்ட சூழலில் இதுபோன்ற காணொலி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:செல்ஃபி எடுக்க ஆற்றில் இறங்கிய இளம்பெண்கள் வெள்ளத்தில் தவிப்பு: மீட்ட காவல் துறை!

ABOUT THE AUTHOR

...view details