தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தலை துண்டிக்கப்பட்ட வழக்கு: திமுக கிளை செயலாளரிடம் விசாரணை - dindigul latest news

இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், திமுக கிளை செயலாளரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

கொலை வழக்கு  கொலை  கொலை செய்திகள்  திண்டுக்கல் செய்திகள்  திண்டுக்கள் கொலை வழக்கு  murder news  murder  dindigul news  dindigul latest news  dindigul murder issue
கொலை வழக்கு

By

Published : Sep 25, 2021, 10:06 PM IST

திண்டுக்கல் மாவட்டம்அனுமந்தராயன் கோட்டை பகுதியைச் சேர்ந்தவ ஸ்டீபன் என்பவர் கடந்த 22ஆம் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது தலை துண்டிக்கப்பட்ட நிலையில், அப்பகுதி பேருந்து நிறுத்தம் அருகே கிடந்தது. இந்தக் கொலை தொடர்பாக காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதனிடையே சாமியார் பட்டியைச் சேர்ந்த மன்மதன், கார்த்திகேயன், சங்கரபாண்டி, மார்தீஸ்வரன், ராம்குமார், மணிகண்ட ராஜன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் மன்மதன் கைது செய்யப்பட்டபோது தப்பிக்க முயன்று கால் முறிவு ஏற்படுத்திக்கொண்டார். இதனால் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். மீதமுள்ள 5 பேர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் திமுக கிளை செயலளார் இன்பராஜ், என்பவரிடம் சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: ஸ்மூல் செயலி மூலம் பெண்களை ஏமாற்றி பணம் பறித்தவர் கைது

ABOUT THE AUTHOR

...view details