தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேடசந்தூர் அருகே லாரி மீது கார் மோதல்; இருவர் உயிரிழப்பு - திண்டுக்கல் அண்மைச் செய்திகள்

திண்டுக்கல் : வேடசந்தூர் அருகே பழுதாகி நின்றிருந்த லாரியின் பின்புறத்தில் கார் மோதியது. இதில் காரில் பயணித்த இருவர் உயிரிழந்தனர்.

வேடசந்தூர் அருகே லாரி மீது கார் மோதல்
வேடசந்தூர் அருகே லாரி மீது கார் மோதல்

By

Published : Apr 20, 2021, 11:51 PM IST

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் எம்.சாண்ட் மணல் ஏற்றிச் சென்ற லாரி பஞ்சராகி நின்றது. லாரியை கொடுமுடியைச் சேர்ந்த பொன்னுச்சாமி ஓட்டி வந்தார். அப்போது, நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் கார் ஒன்று பயங்கரமாக மோதியது.

சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுவிட்டு திரும்பிய காரை பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் நாகராஜ் என்பவர் ஓட்டி வந்தார். இதில் காரில் பயணித்த முன்னாள் இந்திய விமானப்படை வீரர் கோவிந்தராஜன்(77), மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த ஓட்டுநர் நாகராஜ், கோவிந்தராஜன் மனைவி பாரதி ஆகியோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்தோரின் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க : ’ஏசி காரில் செல்லும்போது கூட கூவம் நாற்றமடிக்கிறது’ - தலைமை நீதிபதி வேதனை!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details