திண்டுக்கல்: செம்பட்டியைச் சேர்ந்தவர்கள் கதிரேசன் மற்றும் கணேசன். கணேசன் கோயம்புத்தூரில் பணிபுரிந்து வருகிறார். இன்று (பிப். 27) வேலை நிமித்தமாக கணேசனும் கதிரேசனும் காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது நள்ளிரவில் வடமதுரை அருகே வந்தபோது திடீரென காரின் முன்பக்க பகுதியில் புகை வந்துள்ளது. இதனையடுத்து திண்டுக்கல் - திருச்சி தேசிய நான்கு வழிச்சாலையில் சாலையோரம் காரை நிறுத்தி பார்த்தபோது, கார் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதைக்கண்ட இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினார். சிறியதாக பற்றிய தீ மளமளவென கார் முழுவதும் பற்றி எரியத் தொடங்கியது.