தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோட்டாட்சியர் வாகனம் கவிழ்ந்து விபத்து - திண்டுக்கல் செய்திகள்

திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் சென்ற வாகனம் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

car accident in dindigul  car accident  accident  dindigul news  dindigul latest news  வாகன விபத்து  சாலை விபத்து  விபத்து  திண்டுக்கல் செய்திகள்  திண்டுக்கல் கோட்டாட்சியர் வாகன விபத்து
கவிழ்ந்த வாகனம்

By

Published : Aug 17, 2021, 10:52 PM IST

திண்டுக்கல்: வருவாய் கோட்டாட்சியர் காசிச்செல்வி (40) இன்று நிலக்கோட்டை தாலுகா பகுதிக்கு ஆய்வுக்காக சென்றார்.

அப்போது திண்டுக்கல்லிருந்து நிலக்கோட்டை செல்லும் வழியில் மைக்கேல்பாளையம்-சமத்துவபுரம் இடையே திடீரென விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்து, சாலையில் கிருஷ்ணன் (70) என்பவர் இருசக்கர வாகனத்தில் குறுக்கே வந்ததால் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் கிருஷ்ணனின் இருசக்கர வாகனத்த்தில் மோதி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த, கோட்டாட்சியர் வாகனம் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்துள்ளது.

கவிழ்ந்த வாகனம்

உயிர் தப்பிய கோட்டாட்சியர்

இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக கோட்டாட்சியர் காசிச்செல்வி, அவரின் உதவியாளர் ஜான்சன் (49), ஓட்டுநர் சக்திவேல் (50) மோவரையும் மீட்டு, நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுப்பி வைத்தனர்.

இதில் கோட்டாட்சியர் காசிச்செல்வியும், உதவியாளர் ஜான்சனும் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆனால், வாகன ஓட்டுநர் சக்திவேலுக்கு, வாகனத்தில் ஸ்டியரிங் நெஞ்சுப் பகுதியில் பலமாக மோதியதில், நெஞ்சு மற்றும் தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு - முதல் குற்றவாளி சயானிடம் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details