திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பழனி சாலை, சத்திரப்பட்டி அருகே கோவையிலிருந்து திருநெல்வேலிக்கு சென்றுகொண்டிருந்த காரும், ஒட்டன்சத்திரத்திலிருந்து பழனி நோக்கி சென்ற அரசு போக்குவரத்துக்கழக பணிமனை பேருந்தும் நேருக்கு நேர் மோதியது.
காரும் பேருந்தும் மோதி விபத்து: குழந்தை பலி - குழந்தை உயிரிழப்பு
திண்டுக்கல்: காரும் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில் காரில் பயணம் செய்த ரஜான் ஹைதர்ஷரிப் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை தலையில் பலத்த காயம் ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது. மேலும் காரை ஓட்டி வந்த குழந்தையின் தந்தை இப்ராஹிம்ஷரிப், தாய் ரேஸ்மா பானு, அப்ஷரா ஆகியோருக்கு காயங்களுடன் ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் காரில் வந்த 5 பேர் காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினர். இறந்த குழந்தையின் உடல் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து சத்திரப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியது.