தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடைக்கானல் முட்டைக்கோஸ் விலை அதிகரிப்பு  - விவசாயிகள் மகிழ்ச்சி! - திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப்பகுதிகளில் முட்டைக்கோஸ் விளைச்சலும் விலையும் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

முட்டைக்கோஸ் விளைச்சல் அதிகரிப்பால் மகிழ்ச்சியடையும் விவசாயிகள்

By

Published : Nov 9, 2019, 1:30 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைக்கிராமங்களான வில்பட்டி, அட்டுவம்பட்டி, கோவில்பட்டி, அடிசரை, பள்ளங்கி உள்ளிட்ட ப‌ல்வேறு கிராமங்களில், பெரும்பாலும் கேர‌ட் , உருளைக்கிழ‌ங்கு, பீன்ஸ், முட்டைக்கோஸ் உள்ளிட்ட‌ ப‌ல ப‌யிர்க‌ள் ப‌யிரிட‌ப்ப‌ட்டு விவ‌சாய‌ம் செய்து வருகின்றனர்.

இந்த மலைக்கிராமங்களில் த‌ற்போது பல ஏக்கர் பரப்பளவில் முட்டைக்கோஸ் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாத காலமாக மலைப்பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக முட்டைக்கோஸ் விளைச்சல் அதிகரித்துள்ளது. மேலும், அதற்கு ஏற்றார்போல் விலையும் அதிகரித்து தற்போது ஒரு கிலோ ரூபாய் 15 முதல் 18 வரை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் .

முட்டைக்கோஸ் விளைச்சல் அதிகரிப்பால் மகிழ்ச்சியடையும் விவசாயிகள்

கொடைக்கானல் பகுதியில் அறுவடை செய்யப்படும் முட்டைக்கோஸ்கள் மதுரை, திருச்சி, சேலம், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் கேரளா, அசாம், கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.

இந்நிலையில், வெளி மாநிலங்களிலும் முட்டைக்கோஸிற்கு நல்ல வரவேற்பு இருப்பதால் விவசாயிகள் இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க : எப்போது குறையும் வெங்காயத்தின் விலை? அமைச்சர்கள் விளக்கம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details