திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள புகையிலைப்பட்டியைச் சேந்தவர் ஜேசு ஆரோக்கியராஜ். இவர் வடமதுரை அருகே உள்ள வி.எஸ். கோட்டை கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிவருகிறார். இவர் இன்று அதிகாலை புகையிலைப்பட்டியில் உள்ள தனது வீட்டிலிருந்து சொந்த வேலை காரணமாக வடமதுரை நோக்கி காரில் சென்றுள்ளார்.
சாலையின் நடுவே தீப்பற்றி எரிந்த அரசு அலுவலரின் கார்! - VAO officer
திண்டுக்கல்: வடமதுரை அருகே கிராம நிர்வாக அலுவலரின் கார் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென தீப்பற்றி எரிந்ததில் கார் முழுவதும் எரிந்து நாசமாகியது.
car fire on road
அப்போது கார் நந்தவனப்பட்டி அருகே சென்றபோது என்ஜினிலிருந்து புகை வந்துள்ளது. உடனே மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கியதைக் கண்ட ஜேசு ஆரோக்கியராஜ் காரின் கதவை திறந்து உடனே இறங்கிவிட்டார். இதில் கார் முழுவதும் எரிந்து சாம்பலானது.
இது குறித்து வடமதுரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த விபத்தில் நல்வாய்ப்பாக ஜேசு ஆரோக்கியராஜ் உயிர் தப்பினார்.