கேரள மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து தனியார் சொகுசுப் பேருந்து ஒன்று, மதுரை நோக்கி வந்துகொண்டிருந்தது. அந்தப் பேருந்து திண்டுக்கல் மாவட்டம் காமலாபுரம் பாலத்தை கடந்து வந்தபோது பேருந்து ஓட்டுநர் தூங்கியதால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கொடைரோடு சுங்கச்சாவடி பெயர்ப்பலகை கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
பேருந்து கவிழ்ந்த விபத்தில் இருவர் பலி; 20 பேர் காயம்! - Bus accident in kodai road
திண்டுக்கல்: கொடைரோடு சுங்கச்சாவடி அருகே வந்த தனியார் சொகுசுப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் ஒரு பெண் உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர்.
![பேருந்து கவிழ்ந்த விபத்தில் இருவர் பலி; 20 பேர் காயம்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3779577-277-3779577-1562578950811.jpg)
கொடைரோடு
விபத்தில் கவிழ்ந்த பேருந்து
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த ஒரு பெண் சம்பவ இடத்திலேயே பலியானார், 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்தார். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.