தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடைக்கானலில் பற்றி எரியும் காட்டுத்தீ! - திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்: கொடைக்கானல் வனப்பகுதியில் கடும் வெயில் காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

பற்றி எரியும் காட்டுத்தீ
பற்றி எரியும் காட்டுத்தீ

By

Published : Apr 2, 2021, 9:11 PM IST

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள மரங்கள், புதர்கள் ஆகியவை கருகி வருகின்றன. ஆண்டுதோறும் காட்டுத் தீயை கட்டுப்படுத்துவதற்காக வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இந்த முறை எந்த ஒரு நடவடிக்கையும் வனத்துறையினர் சார்பில் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

பற்றி எரியும் காட்டுத்தீ

கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை உள்ளிட்ட கடந்த இரு தினங்களாக வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு கடுமையான புகைமூட்டம் நிலவி வருகிறது. அதனால் வாகனங்களில் சென்றவர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். தீயைக்கட்டுப்படுத்த தீத்தடுப்பு பணியாளர்களை நியமிக்க வைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: கொடைக்கானலில் காட்டுத்தீ: திணறும் தீயணைப்புத் துறை

ABOUT THE AUTHOR

...view details