திண்டுக்கல் மாவட்டம் கேசி பட்டியில் 32 வயதான மாலதியும், சதீஸ் (26) என்பவரும் ஐந்து வருடங்களாக கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு நான்கு வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில், சதீஸ் தனது பெற்றோர் பார்த்த வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாலதி, சதீஸின் தந்தை நடத்தி வரும் டீ கடை முன்பு சனிக்கிழமை (ஆக.29) பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து மாலதி மரணத்திற்கு காரணமான காதலன் சதீஷை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.