தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை திருட்டு - பட்டிவீரன்பட்டி காவல்துறை

தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை, 22,000 ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றது குறித்து, பட்டிவீரன்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைமை ஆசிரியர்
தலைமை ஆசிரியர்

By

Published : Aug 1, 2022, 9:06 PM IST

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் பரமேஸ்வரி (50). இவரது கணவர் ராஜேந்திரன் இறந்து விட்ட நிலையில், தனது இரண்டு மகள்களுடன் அய்யம்பாளையத்தில் வசித்து வருகிறார்.

பரமேஸ்வரி தேவரப்பன் பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை தனது உறவினரை பார்க்க சின்னாளப்பட்டி அருகில் உள்ள வக்கம்பட்டிக்கு சென்று விட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று (ஜூலை.31) இரவு ஊருக்கு சென்ற பரமேஸ்வரி திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு மாடிப்படி வழியாக உள்ளே இறங்கிய கொள்ளையர்கள், பீரோவை உடைத்து 50 பவுன் நகை மற்றும் 22,000 ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து பரமேஸ்வரி அளித்த புகார் பேரில் பட்டிவீரன்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:கல்லூரி மாணவரின் உயிரிழப்பிற்குக் காரணமான மருந்துக்கடைக்குச் சீல்..!

ABOUT THE AUTHOR

...view details