திண்டுக்கல்: வேடசந்தூர் அடுத்த குஜிலியம்பாறை அருகில் உள்ள கரும்பாறைபட்டியல் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி ஒன்று உள்ளது. இதில், தேங்கியிருந்த நீரில், பாளையத்தை சேர்ந்த பாலசுப்ரமணி என்பவரது மகன் கவி பாரதி (15), மதிவாணன் என்பவரது மகன் கேசவன்(14) ஆகிய இரண்டு சிறுவர்கள் நேற்று (பிப்.14) மாலை மீன்பிடிக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது.
மீன் பிடிக்கச் சென்ற சிறுவர்கள் நீண்ட நேரம் வீட்டிற்கு வராத நிலையில், அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அப்பகுதி முழுவதும் சிறுவர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில், சிறுவர்கள் மீன்பிடிக்கச் சென்றதாக பெற்றோர்களுக்குத் தெரியவர, அருகில் இருந்த குவாரிக்கு சென்ற பெற்றோர் அங்கு அவர்களின் ஆடை இருப்பதை பார்த்துக் கதறி அழுதனர்.