தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குப்பைத் தொட்டியில் சிசுக்கள் சடலம்... யார் காரணம்? போலீசார் விசாரணை! - babies body in dustbin

திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் தூய்மை பணியாளர்கள் குப்பைத் தொட்டியில் இருந்து குப்பையை அள்ள சென்றபோது இறந்த நிலையில் கிடந்த 2 குழந்தைகளின் உடலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இறந்த நிலையில் குப்பை தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட 2 சிசுக்களின் உடல்: போலிசார் விசாரணை
இறந்த நிலையில் குப்பை தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட 2 சிசுக்களின் உடல்: போலிசார் விசாரணை

By

Published : Jul 30, 2023, 9:14 PM IST

இறந்த நிலையில் குப்பை தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட 2 சிசுக்களின் உடல்: போலிசார் விசாரணை

திண்டுக்கல்: மேட்டுப்பட்டி பகுதியில் குப்பைத் தொட்டியில் இறந்த நிலையில் கிடந்த 2 சிசுக்களின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது மேட்டுப்பட்டி ஊராட்சி. இங்கு புனித பிலோமினாள் பள்ளி அருகே மாநகராட்சி சார்பாக பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குப்பைத் தொட்டி வைக்கப்பட்டுள்ளது.

இன்று(ஜூலை. 30) காலை தூய்மை பணியாளர்கள் குப்பைத் தொட்டியில் இருந்து குப்பையை அல்ல சென்ற போது, தொட்டியில் குறைமாத சிசுக்கள் 2, இறந்த நிலையில் கிடந்து உள்ளன. அதனை கண்ட அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில் ஒரு சிசுவின் தலை துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் இருந்தது. பாதி உடலை நாய் கடித்து இழுத்துச் சென்று இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:குண்டாறு அணை பகுதியில் சுற்றுலா பயணிகளிடையே மோதல் - பரபரப்பு வீடியோ காட்சிகள் வைரல்!

இதனை அடுத்து சம்பவம் தொடர்பாக உடனடியாக நகர் தெற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குப்பைத் தொட்டியில் கிடந்த சிசுக்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். அதேநேரம் குப்பைத் தொட்டியில் சிசுக்களின் வீசி சென்றது யார், இரண்டும் ஒரே தாய்க்கு பிறந்ததா, மற்றும் ஏதேனும் கள்ளத்தொடர்பு காரணமாக பிறந்ததா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் சிசுக்களின் உடல்கள் இறந்த நிலையில் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:மது போதையில் ரோந்து வாகனத்தை முட்டித் தூக்கிய இளைஞர்... போதையை மறைக்க போலீசாருடன் வாக்குவாதம்!

ABOUT THE AUTHOR

...view details