தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடைக்கானலில் பாஜக திடீர் சாலைமறியல்! - bjp road blocking protest in kodaikanal

திண்டுக்கல் பாஜக மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் வடமதுரையில் கைது செய்யப்பட்டதை கண்டித்து கொடைக்கான‌லில் பாஜகவினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

பாஜக திடீர் சாலைமறியல்
பாஜக திடீர் சாலைமறியல்

By

Published : Jun 18, 2021, 11:16 PM IST

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதியை சேர்ந்த சக்திவேல் என்ற திமுக பிரமுகர், முகநூலில் ஒன்றிய அரசை விமர்சனம் செய்ததற்கு, சரவணன் என்ற பாஜக பிரமுகர் பதில் விமர்சனம் செய்துள்ளார். இதில் காவல் துறையினர் சரவணனை கைது செய்துள்ளதாக தெரிகிறது.

பல்வேறு இடங்களில் போராட்டம்

இதனால், இருவருக்குமிடையே முகநூலில் நடந்த விமர்சனம் தொடர்பாக பாஜகவினர் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட சரணவனை விடுவிக்கக்கோரி வடமதுரை காவல்நிலையத்திற்கு பாஜக மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் பேச்சுவார்த்தைக்கு சென்றார்.

அங்கு உடன்பாடு ஏற்படாததால் கனகராஜ் தலைமையிலான பாஜகவினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் பாஜக மாவட்ட தலைவரை கைது செய்தனர். இதனால், காவ‌ல்துறையை கண்டித்து ப‌ல்வேறு இடங்களில் போராட்ட‌ம் ந‌டைபெற்ற‌ நிலையில், கொடைக்கான‌லில் பாஜகவினர் மூஞ்சிக்க‌ல் ப‌குதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பாஜகவினரின் திடீர் சாலை மறியலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: 391 கோடி மோசடி செய்த தனியார் இரும்பு நிறுவனம்: சிபிஐ வழக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details