தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழனி அருகே 30க்கும் மேற்பட்ட கொத்தடிமைகளை மீட்ட பாஜகவினர் - பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர்!

பழனி அருகே பல ஆண்டுகளாக கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்த 30-க்கும்‌ மேற்பட்டவர்களை பாஜகவினர் மீட்டு தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

பழனி அருகே 30 க்கும் மேற்பட்ட கொத்தடிமைகளை மீட்ட பாஜகவினர் - பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர்!
பழனி அருகே 30 க்கும் மேற்பட்ட கொத்தடிமைகளை மீட்ட பாஜகவினர் - பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர்!

By

Published : Jul 26, 2022, 9:07 PM IST

திண்டுக்கல்மாவட்டம் பழனி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் கரும்பு விவசாயமும், நூற்றுக்கணக்கான செங்கல் சூளைகளும்‌ இயங்கி வருகின்றன. இவற்றை நம்பி ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் பழனியை அடுத்துள்ள பெரியம்மாபட்டி, பெருமாள்புதூர் உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள கரும்புத் தோட்டங்களில் கொத்தடிமைகளாக இருந்த 30-க்கும் மேற்பட்டோரை, அப்பகுதி பாஜக நிர்வாகிகளான ராஜிவ்காந்தி மற்றும் மஞ்சப்பன் ஆகிய இருவரும் இணைந்து மீட்டு பழனி தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இதுகுறித்து கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டவர்கள் கூறுகையில், “விழுப்புரம் மாவட்டம், வளவனூர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்படப் பல்வேறு மாநிலங்களில் உள்ள கரும்புத் தோட்டங்களில் விளையும் கரும்புகளை வெட்டிக்கொடுக்கும் தொழில் செய்துவருகிறார்.

கரும்பு வெட்டுவதற்காக‌ சண்முகத்திற்கு அதிக நபர்கள் தேவைப்படுவதால், தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆள் பிடிப்பதற்காக சண்முகத்திடம் சங்கர், பிரசாந்த் என்கிற இருவரும் புதிய ஆட்களைப்பணிக்கு அழைத்து வரும் பணியை செய்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும், ஆதரவின்றி உள்ள நபர்கள் மற்றும் வறுமையில் தவிக்கும் குடும்பங்களைப் பார்த்து, மாதந்தோறும் நல்ல சம்பளம் தருவதாக ஆசை வார்த்தைக்கூறி அழைத்து வந்து, சண்முகத்திடம் கொண்டு வந்து விட்டுச்சென்று விடுகிறார்கள். எங்களுக்கு ஆண்டுக்கணக்கில் சம்பளம் கொடுக்காமல் வேலை வாங்குவார்கள். குடும்பத்தினரை காணவிடாமல் கொடுமைப்படுத்துவார்கள்.

வேலை செய்யாதவர்களையும், தப்பித்துப்போக முயல்பவர்களையும் கரும்பால் அடித்து துன்புறுத்துவார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊருக்கு அழைத்துச்செல்வார்கள். எங்களால் தப்பிக்க முடியாதபடி காவல் இருப்பார்கள்” எனத் தெரிவித்தனர்.

மேலும் இதில் மீட்கப்பட்ட பெண் ஒருவர் கூறுகையில், “எனக்குத் திருமணமாகி கணவர் உயிரிழந்து விட்டார். எனக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். எனது குழந்தைகளை எனது அம்மாவிடம் விட்டுவிட்டு ‌வந்து, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. தற்போது அவர்களின் நிலை என்னவானது எனத் தெரியவில்லை.

எங்களைப்போல இன்னும் நூற்றுக்கணக்கானோர் இதுபோல் சிக்கியுள்ளனர். அவர்களையும் மீட்டு குடும்பத்தாரிடம் சேர்க்க வேண்டும்” எனக் கூறினார்.

பழனி அருகே 30 க்கும் மேற்பட்ட கொத்தடிமைகளை மீட்ட பாஜகவினர் - பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர்!

இதையும் படிங்க:மூத்த மகனுக்கு பணம் கொடுத்த ஆத்திரம்... பெற்றோரை சுத்தியால் தாக்கி கொலை இளைய மகன்...

ABOUT THE AUTHOR

...view details