தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழனியில் தரிசனம் செய்த பாஜக தலைவர் அண்ணாமலை - bjp leadder annamalai

தமிழ்நாடு பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை, பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

bjp-leadder-annamalai-palani-tharisanam
பழனியில் தரிசனம் செய்த தமிழ்நாடு பாஜக தலைவர்

By

Published : Jul 12, 2021, 10:35 AM IST

திண்டுக்கல்:தமிழ்நாடு பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ஐபிஎஸ் அலுவலர் அண்ணாமலை குடும்பத்துடன் பழனி முருகனை தரிசனம் செய்தார். பழனி சென்ற அவருக்கு பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பழனி மலை அடிவாரத்திலிருந்து வின்ச் மூலமாக மலைக்குச் சென்ற அண்ணாமலை ராஜ அலங்காரத்தில் இருந்த முருகனை வழிபட்டார். தலைவர் பொறுப்பை ஏற்ற பிறகு செய்தியாளர்களை சந்திப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

பழனி முருகன் கோயிலில் அவர் தரிசனம் செய்தபோது, பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:தலைவரானார் அண்ணாமலை: கொண்டாட்டத்தில் தொண்டர்கள்

ABOUT THE AUTHOR

...view details