திண்டுக்கல்: பழனி அருகே உள்ள குதிரையாறு அணைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியினத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களுக்கு பாஜகவின் மாவட்ட மருத்துவப் பிரிவு சார்பில் வீடுகளை தேடிச்சென்று மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு மருத்துவ முகாம் நடத்திய பாஜகவினர்! - Political news
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு பாஜக சார்பில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
அப்போது முழு உடல் பரிசோதனை, நீரிழிவு நோய், கர்ப்பப்பை பிரச்னைகள், மாதவிடாய் தொடர்பான பிரச்னைகள் மற்றும் ரத்த சோகை உள்ளிட்ட பல நோய்களுக்கும் சோதனை செய்யப்பட்டு, மருந்துகள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும் பிரதமரின் இலவச பெண்கள் நல மருத்துவம் மற்றும் பிரதமர் மருத்துவ காப்பீட்டு அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த மருத்துவ முகாமில் பெண் மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டப் பலரும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:Rafale watch கட்டுனது குத்தமா.? ட்விட்டரில் அடித்துக்கொள்ளும் அண்ணாமலை Vs செந்தில் பாலாஜி