தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“வேல் யாத்திரை செல்வதற்கு பாஜகவினருக்கு அருகதை இல்லை” - ஐ.பெரியசாமி - பழனி அடிவாரம்

திண்டுக்கல் : திருச்செந்தூர் கோயில் வைர வேலை திருடிய அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜகவினருக்கு வேல் யாத்திரை செல்வதற்கு அருகதை இல்லை என திமுக துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.

BJP have no rights to go for the Vel pilgrimage
மக்கள் சந்திப்பு இயக்கம் பரப்புரையில் திமுக துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி

By

Published : Dec 7, 2020, 9:33 PM IST

அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ‘மக்கள் சந்திப்பு இயக்கம்’ என்ற பெயரில் திமுக தனது பரப்புரைப் பயணத்தை தொடங்கியுள்ளது. அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அண்மையில் தங்களது பரப்புரைப் பயணத்தை தொடங்கினார்.

அந்தவகையில், திமுக துணை பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி இன்று திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து தனது பரப்புரைப் பயணத்தை தொடங்கினார். பொதுமக்கள், வர்த்தகர்களைச் சந்தித்து பேசிய அவர், அவர்களது தேவைகளைக் கேட்டறிந்தார். இதனைத்தொடர்ந்து, மலை அடிவாரம் பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

பின்னர் ஊடகங்களைச் சந்தித்துப் பேசிய லியோனி, “பழனி பகுதியின் வளர்ச்சியில் திமுக பெரும்பங்கு வகிக்கிறது. பழனியை சுற்றிலும்‌ அணைகள் கட்டியது, பழனி - கொடைக்கானல் சாலையை அமைத்தது, பழனியில் இருந்து சென்னைக்கு ரயில் வசதி செய்து கொடுத்தது என பல்வேறு நலத் திட்டங்களை திமுக கொண்டு வந்துள்ளது . பழனி முருகன் ஏதோ பாஜகவினருக்கு மட்டுமே சொந்தம் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர். ஆனால் பழனி கோவில் மூலவர் சிலையை பாதுகாத்தது திமுகதான். மேலும் திருச்செந்தூர் முருகன் கோyஇல் வைரவேலை திருடிய அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜகவினர் வேல் எடுத்து யாத்திரை செல்வது வேடிக்கையாக உள்ளது. தொடர்ந்து வணிகர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் உட்பட பலரும் வைத்துள்ள கோரிக்கைகளை பரிசீலனை செய்து திமுக ஆட்சி அமைந்தவுடன் நிறைவேற்றப்படும்.

மக்கள் சந்திப்பு இயக்கம் பரப்புரையில் திமுக துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் உத்தரவுப்படி, 16 பேர் கொண்ட குழுவினர் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பரப்புரை பயணத்தைத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், இன்று பழனியில் எனது பரப்புரையைத் தொடங்கியுள்ளேன். இது வழக்கமான பரப்புரை அல்ல. மக்கள் சந்திப்பு இயக்கமாக நடத்துகிறோம். அதாவது மக்களை சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்துப் பெற்று, அதற்கேற்ப தேர்தல் அறிக்கை தயார் செய்ய தான் இந்த மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெறுகிறது.

மலை அடிவாரம் பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற ஐ.பெரியசாமி

இந்நிகழ்ச்சியில் பழனி சட்டப்பேரவை உறுப்பினர்‌ ஐ.பி.செந்தில்குமார், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி உள்ளிடட் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்‌ கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க :ஏழை எளிய மக்களின் மருந்தகம்

ABOUT THE AUTHOR

...view details