திண்டுக்கல்: சின்னாளப்பட்டி அருகே உள்ள காந்தியகிராம பல்கலைக்கழகத்தின் 36ஆவது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி நாளை (நவ.11) பங்கேற்கவுள்ளார். இந்நிலையில் மோடியின் வருகையையொட்டி, சாலைகளின் இருபுறங்களிலும் பாஜகவினர் அக்கட்சியின் கொடிகளை நட்டு வைத்திருந்தனர்.
அதேவேளையில் பிரதமர் மோடி வருகை தர உள்ள நிலையில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அந்நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார். இதனிடையே திமுகவினரும் முதலமைச்சரின் வருகையையொட்டி, திமுகவின் கொடியை சாலைகளின் இருபுறங்களிலும் நட்டுள்ளனர்.