திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் பாஜக கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில துணைத் தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அலுவலருமான அண்ணாமலை சிறப்புரை ஆற்றினார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, “ரஜினி கொள்கையும், பாஜக கட்சியின் கொள்கையும் அடிப்படையில் உண்மையானது. நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் ஆன்மிகப் புரட்சி கொண்டு வரவேண்டும் என்பதே எங்களது நோக்கம். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன்.
விவசாயிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட மூன்று மசோதாக்களை நான் வரவேற்கிறேன். முதலாவது மசோதா விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களை உரிய விலை கிடைக்கச் செய்வது. இரண்டாவது மசோதா விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்வது. மூன்றாவது மசோதா சில பொருள்களுக்கு அரசு விலை நிர்ணயம் செய்யும் நிலையை உடைப்பது. இதுதான் மூன்று மசோதாக்களாகும்.