திண்டுக்கல் :பழனியில் நடைபெற்ற உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு அண்ணாமலை வருகைதந்தார். அதன் பின்னர், பழனி முருகன் மலைக் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம்செய்தார்.
இதனையடுத்து செய்தியாளரைச் சந்தித்த அவர், "பழனி முருகன் கோயில் பாலாலயம் நடைபெற்று இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், இதுவரை குடமுழுக்கு நடத்தப்படவில்லை.
கடந்த 18 ஆண்டுகளுக்கு மேலாகக் குடமுழுக்கு நடத்தப்படாத நிலையில் ஆகம விதிகளின்படி விரைவில் பழனி முருகன் கோவில் குடமுழுக்கை நடத்த வேண்டும்" என்று வலியுறுத்தினார்.