தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உலக உணவுத் தினம்; திண்டுக்கல்லில் 5 பைசாவிற்கு பிரியாணி! - 5 பைசா பிரியாணி

உலக உணவுத் தினத்தை முன்னிட்டு உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஐந்து பைசாவிற்கு பிரியாணி வழங்கப்பட்டது.

5 பைசாவிற்கு பிரியாணி
5 பைசாவிற்கு பிரியாணி

By

Published : Oct 16, 2020, 6:49 PM IST

திண்டுக்கல்: உலக உணவுத் தினமான இன்று (அக்.16) திண்டுக்கல் முஜிப் பிரியாணி கடையில் 5 பைசாவிற்கு 300 பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது.

திண்டுக்கல் என்றால் பிரியாணி என்பது தனி அடையாளமாக இருந்து வருகிறது. இந்நிலையில், உலக உணவுத் தினத்தை முன்னிட்டு பழமையை நினைவுகூரும் விதமாக ஐந்து பைசாவிற்கு பிரியாணி வழங்கப்படும் என முஜிப் பிரியாணி கடை நிர்வாகத்தின் சார்பாக விளம்பரம் செய்யப்பட்டது.

இதையடுத்து, பொதுமக்கள் தாங்கள் வைத்திருந்த பழைய ஐந்து பைசா நாணயங்களை கொடுத்து பிரியாணி வாங்கிச் சென்றனர். மேலும் பெரியவர்கள், சிறுவர்கள், சிறுமிகள் என ஏராளமானோர் ஆர்வமாக பிரியாணி வாங்கிச் சென்றனர்.

5 பைசாவிற்கு பிரியாணி

2019ஆம் ஆண்டு உலக உணவுத் தினத்தில் 5 பைசாவிற்கு 300 பேருக்கு பிரியாணி வழங்கப்பட்ட நிலையில், இந்த முறை 500 பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உணவு தவிர்த்த பழமையையும் நாம் நினைவுகூரலாம் என முஜிப் பிரியாணி நிர்வாகத்தினர் கூறினர்.

இதையும் படிங்க: கரோனா ஊரடங்கில் லட்ச கணக்கில் பிரியாணிகளை தின்று முழுங்கிய இந்தியர்கள்!

ABOUT THE AUTHOR

...view details