தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடைக்கானலில் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம் - Tourist Place Kodaikanal

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கப்பட்டது.

பறவைகள் கணக்கெடுப்பு பணி
பறவைகள் கணக்கெடுப்பு பணி

By

Published : Mar 28, 2022, 6:56 AM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் வனக்குருவிகள், சோலைக்குருவிகள், கிளி வகைகள், பருந்துகள், குயிலினங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையிலான பறவை இனங்கள் உள்ளன. இவற்றை கணக்கெடுக்கும் பணி நேற்று (மார்ச் 28) தொடங்கியது. முதல்கட்டமாக மாவட்ட வனத்துறை அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து பாம்பு சோலை, புலிச்சோலை, பாம்பாறு அருவி உள்ளிட்ட பகுதிகளில் குழுக்களாக பிரிந்து பணிகளை செய்து வருகின்றனர்.

கொடைக்கானலில் பறவைகள் கணக்கெடுப்பு பணி

இந்த பணிகள் இரண்டு நாள்கள் நடைபெறும் என்றும் பறவைகள் கணக்கெடுப்பு நிறைவுபெற்ற உடன் பறவை வகைகள் கொண்ட புகைப்பட கையேடு உருவாக்கப்படும் என்றும் வனச்சரகர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:கிணற்றில் தஞ்சமடைந்த 7 அடி முதலை: வனத்துறையினர் மீட்பு

ABOUT THE AUTHOR

...view details