தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 29, 2020, 8:58 PM IST

ETV Bharat / state

கட்டி முடிக்கப்படாத காய்கறி மார்க்கெட் : வியாபாரத்தைத் தொடங்கவுள்ள வணிகர்கள்

திண்டுக்கல் : தங்களுக்கு நிரந்தர இடம் ஒதுக்கித் தராததால் கட்டி முடிக்கப்படாத காய்கறி சந்தையில் வியாபாரத்தை தொடங்கவுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

காய்கறி மார்க்கெட்
காய்கறி மார்க்கெட்

கரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமடைந்ததன் காரணமாக திண்டுக்கல்லில் காந்தி காய்கறி சந்தை மூடப்பட்டது. பின்னர் தற்காலிகமாக திண்டுக்கல் பேருந்து நிலையம், எம்.வி.எம் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி ஆகிய இடங்களில் சந்தை செயல்பட்டு வந்தது.

அதேபோல் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நத்தம் சாலையில் உள்ள அரசு ஐடிஐ கல்வி நிறுவனத்திலும் சந்தை செயல்பட்டு வருகிறது. இதனிடையே காந்தி காய்கறி சந்தையில் உள்ள கடைகள் அனைத்தும் மாநகராட்சி நிர்வாகத்தால் இடிக்கப்பட்டு புதிதாக 250க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் அரசு ஐடிஐ கல்வி நிறுவனத்தில் இருந்து கடைகளை காலி செய்யுமாறு அரசு ஐடிஐ அலுவலர்கள் கூறி வருகின்றனர். இதனால் வியாபாரிகள் நத்தம் சாலையில் கடைகளை அமைத்து காய்கறிகளை விற்பனை செய்யக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே காந்தி காய்கறி சந்தையில் கடைகள் கட்டும் பணிகள் 75 சதவீதம் முடிவடைந்த நிலையில், வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் கடைகளை தங்கள் வசப்படுத்திக் கொண்டு, நாளை (செப்டம்பர் 30) முதல் வியாபாரம் செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதற்காக கடைகளை சுத்தம் செய்தும், பெயர்ப்பலகை நிறுவியும் உள்ளனர். மேலும், இதுகுறித்து பேசிய வியாபாரிகள், தங்களுக்கான இடம் முறையாக வழங்கப்படாததால், தாங்கள் வேறு வழியின்றி நாளை (செப்டம்பர் 30) முதல் கடைகளைத் திறக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details