தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வத்தலக்குண்டில் விடுதிகளில் முறைகேடாக தங்கியிருந்த 6 ஜோடிகள் கைது! - illegal jodi arrest lodge batlagundu

திண்டுக்கல்: வத்தலக்குண்டு தனியார் விடுதியில் நடத்தப்பட்ட சோதனையில், முறைகேடாக விடுதியில் தங்கியிருந்ததாக 6 ஜோடிகளை காவல் துறையினர் கைது செய்தனர்.

batlagundu
batlagundu

By

Published : Nov 27, 2019, 1:18 PM IST

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு, கொடைக்கானல் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லக்கூடிய இடம் என்பதால் சுமார் 15க்கும் மேற்பட்ட தனியார் விடுதிகள் அங்கு செயல்பட்டு வருகின்றன.

இந்தத் தனியார் விடுதிகளில் முறைகேடாக ஆண்கள் சிலர் பெண்களுடன் தங்கி செல்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வத்தலக்குண்டு தனியார் விடுதிகளில் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

கைது செய்யப்பட்ட ஆறு ஜோடிகள்

இந்தச் சோதனையில் 6 ஜோடிகளை சந்தேகத்தின் பேரில் வத்தலக்குண்டு காவல் துறையினர் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

பின்னர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் விடுதிகளில் முறைகேடாக அவர்கள் தங்கியிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து வத்தலக்குண்டு காவல் துறையினர் 6 ஜோடிகளையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சிறையிலடைத்தனர்.

இதையும் படிங்க: உல்லாசமாக வாழ திருட்டில் ஈடுபட்ட காதல் ஜோடி.!

ABOUT THE AUTHOR

...view details