தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வத்தலக்குண்டில் சந்தனக் கட்டைகள் பறிமுதல் - வத்தலக்குண்டில் பதுக்கி வைக்கப்பட்ட சந்தனக் கட்டைகள் பறிமுதல்

வத்தலக்குண்டு அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான சுமார் 31 கிலோ எடை கொண்ட சந்தனக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

By

Published : Jan 24, 2022, 5:32 PM IST

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள ஜி.தும்மலப்பட்டி பகுதியில் வீட்டில் சந்தனக்கட்டைகள் பதுக்கி வைத்திருந்ததாக நிலக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் சுகுமாருக்கு வந்த இரகசிய தகவலையடுத்து பட்டிவீரன்பட்டி காவல் ஆய்வாளர் சங்கரேஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர்.

அப்போது ஜி.தும்மலப்பட்டியைச் சேர்ந்த ஜெயராஜ் (வயது 52) என்பவரது வீட்டில் சந்தனக் கட்டைகள் சாக்கில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து பதுக்கி வைத்திருந்த சந்தனக் கட்டைகளைப் பறிமுதல் செய்ததோடு, ஜெயராஜ் என்பவரையும் கைது செய்து வத்தலக்குண்டு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

இந்த விசாரணையில் 31 கிலோ எடை கொண்ட சந்தனக் கட்டைகளின் மதிப்பு ரூ.1 லட்சத்தைத் தாண்டும் எனவும், விற்பனை செய்வதற்காகவே வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் வத்தலக்குண்டு காவல் (பொறுப்பு) ஆய்வாளர் சங்கரேஸ்வரன் சந்தனக்கட்டைகள் மற்றும் குற்றவாளி ஜெயராஜை வனத் துறை அலுவலர் ரங்கநாதனிடம் ஒப்படைத்தார்.

கொடைக்கானலிலிருந்து வந்த சந்தனக்கட்டைகள்

மேலும் ஜெயராஜ் பதுக்கி வைத்திருந்த சந்தனக் கட்டைகள் தாண்டிக்குடி கொடைக்கானல் உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியிலிருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த வத்தலக்குண்டு காவல் ஆய்வாளர் சங்கரேஸ்வரன் மேலும் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

வத்தலக்குண்டு பகுதியில் சந்தனக்கட்டை கடத்தலுக்கு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமரின் புகைப்படத்தை மாட்டிய பாஜகவினர் மீது வழக்குப்பதிவு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details