தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கிய ரயில்வே தொழிலாளர் சங்கம் - திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்: ரயில் நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் சங்கம் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

cleaning workers
cleaning workers

By

Published : Apr 15, 2020, 9:06 AM IST

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பது அவசியம் என்றாலும், இதனால் அமைப்புசாரா தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ரயில் போக்குவரத்து நிறுத்தத்தால் வேலையின்றி தவிக்கும் ரயில்வே பணியாளர்களுக்கு, தென்னக ரயில்வே சங்கம் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு, தென்னக ரயில்வே தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. உதவிக் கோட்ட செயலாளர் சுதீரன் தலைமையில் அரிசி, மளிகை பொருட்கள், சோப்பு உள்ளிட்ட தொகுப்பு பைகள் வழங்கப்பட்டன.

இதுகுறித்து கிளை செயலாளர் இக்னேசியஸ் ஜான்சன் கூறுகையில், "ரயில் சேவை நிறுத்தப்பட்டிருப்பதன் காரணமாக தூய்மைப் பணியாளர்களுக்கு பொருளாதார பிரச்னை இருப்பதால், அவர்களின் நலன் கருதி நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன" என்றார்.

இதையும் படிங்க:மனித இனத்திற்கு கோவிட் -19 நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது - ஐநா துணை தலைவர்!

ABOUT THE AUTHOR

...view details