தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெகிழிப் பைகளை தயார் செய்த நிறுவனத்திற்கு சீல்! - திண்டுக்கல்லில் பிளாஸ்டிக் பைகளை தயார் செய்த நிறுவனத்திற்கு சீல்

திண்டுக்கல்: அரசின் தடை உத்தரவை மீறி தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை தயார் செய்த நிறுவனத்திற்கு அலுவலர்கள் சீல் வைத்தனர்.

நிறுவனத்திற்கு சீல் வைத்த அலுவலர்கள்
நிறுவனத்திற்கு சீல் வைத்த அலுவலர்கள்

By

Published : Apr 14, 2020, 12:19 PM IST

திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே அரசு தொழிற்பேட்டை இயங்கிவருகிறது. இங்கு வீராசாமி என்பவர் 144 தடை உத்தரவை மீறி தனது தொழிற்சாலையை இயக்கிவருவதாக திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர், வருவாய் துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அலுவலர்கள், நிறுவனத்தை சோதனை செய்தனர். அப்போது, அங்கு ஏற்கனவே அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள், நெகிழிப் பொருள்கள் தயாரித்து வந்தது தெரியவந்தது.

நிறுவனத்திற்கு சீல் வைத்த அலுவலர்கள்

பின்னர், சுமார் 100 டன் எடையுள்ள நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்த அலுவலர்கள் அவரது நிறுவனத்திற்கு சீல் வைத்தனர்.

இதையும் படிங்க: உத்தரவை மீறிய கறிக்கடைக்காரர்: சீல் வைத்த அலுவலர்கள்

ABOUT THE AUTHOR

...view details