திண்டுக்கல்:உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டும், 76ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டும் இந்தியா - பங்களாதேஷ் இடையே மாற்றுத்திறனாளிகளுக்கான டி-20, ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. இவை டிசம்பர் 3ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நத்தம் என்பிஆர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றன.
இதில் 5 போட்டிகள் கொண்ட டி-20, ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் இரு அணிகளும் தலா 2-2 என்ற கணக்கில் சமமானது. அதைத் தொடர்ந்து ஒரு நாள் போட்டிக்கான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி 29.3 ஓவரில் 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன் பின்பு ஆடிய இந்திய அணி 22.5 ஓவரில் 162/3 எடுத்தது வெற்றி பெற்றது. இதற்கு முன்னதாக நடைபெற்ற போட்டிகளை சேர்த்து
ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றியது.
இன்றைய ஒருநாள் போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணியின் பந்து வீச்சாளா், ஒருநாள் போட்டியின் தொடர்நாயகனாக சன்மேக்கர், டி-20 போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணியின் ராஜ் மகேஷ், தொடர் நாயகனாக பங்களாதேஷ் அணியின் ரசூல் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.