தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல தடை: கறுப்புக் கொடிகட்டி எதிர்ப்பு - சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல தடை

திண்டுக்கல்: கரோனா வைரஸ் (தீநுண்மி) ப‌ர‌வ‌ல் எதிரொலியால் கொடைக்கானலுக்குச் சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ளிகளின் வ‌ருகைக்குத் த‌டைவிதிக்க‌ப்பட்ட‌து.

ban-to-tourists-in-kodaikkanal
ban-to-tourists-in-kodaikkanal

By

Published : Apr 24, 2021, 2:31 PM IST

Updated : Apr 24, 2021, 3:30 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்று அதிகரித்துவரும் சூழலில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

தொடர்ந்து கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்குப் பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டது.

இதனைக் கண்டித்து கொடைக்கானலில் வியாபாரிகள், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து சில கட்டுப்பாடுகளுடன் கொடைக்கானலுக்குச் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டுமெனவும் க‌ஞ்சி காய்ச்சி, பிச்சை எடுக்கும் போராட்ட‌த்திலும் ஈடுப‌ட்ட‌ன‌ர்.

தொட‌ர்ந்து நேற்று (ஏப். 23) க‌லைய‌ர‌ங்க‌ம் ப‌குதி உள்ளிட்ட‌ ப‌ல்வேறு ப‌குதிக‌ளில் சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ளை அனும‌திக்க‌ வேண்டுமென‌ க‌டைக‌ளில் கறுப்புக் கொடிக‌ட்டி த‌ங்களின் எதிர்ப்பைத் தெரிவித்துவ‌ருகின்ற‌ன‌ர்.

Last Updated : Apr 24, 2021, 3:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details